
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த. பெரியபுராணம் அருளிச் செய்த தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு திருமுறைத் திருக்கோயிலில் சன்னதி அமைத்து அவதாரத் தலத்தின் சிறப்புகளை திருவருள் துணையுடன் ஏற்றிப் போற்றும் வண்ணம் விளங்க உலகெலாம்.

சிவபெருமான் தக்க அருளாளர்கள் மூலமாக அருளியவையே தமிழ் வேதங்கள் ஆகும். பன்னிரு திருமுறைகளை அருளிச் செய்த 27 அருளாளர்களையும் திருமுறைத் திருக்கோயில் கோஷ்ட மூர்த்தமாக எழுந்தருளச் செய்விக்க வேண்டும்.

சைவப் புண்ணியக் கண்கள் என்று சேக்கிழாரால் போற்றப்படும் நால்வர் சன்னதி திருமுறைத் திருக்கோயிலில் அமைத்து என்றென்றும் சமய உலகம் ஏற்றி போற்றி வழிபட எல்லாம் வல்ல ஞானக்கூத்தன் திருவருள் கூட்டியுள்ளது.